பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..
தொடர்ந்து பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ சுயநலவாதி என்றும், அவர் எதையும் விட்டுக்கொடுத்து இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் ஓபிஎஸ் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை எனவும், அவர் துரோகி என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்….
இந்நிலையில் அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் ஸ்வாமிநாதன் ஓபிஎஸ் தலைமையில் பொதுக்குழு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ ஓபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில், புதிய மாவட்டச் செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் நியமனம். இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி கே பழனிசாமி நீக்கப்பட்டு கே சி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்??..” என்று குறிப்பிட்டுள்ளார்..