நாட்டில் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த நோய்களை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.. சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மருந்து பொருட்களின் தயார்நிலை, தடுப்பூசி பிரச்சாரத்தின் நிலை, புதிய கொரோனா வகைகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வகைகள் மற்றும் அவை ஏற்படும் தாக்கங்கள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

மத்திய சுகாதார செயலாளர், கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் H1N1 மற்றும் H3N2 பாதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார். மார்ச் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தினசரி சராசரி கொரோனா பாதிப்பு 888 ஆகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 0.98% ஆகவும், இந்தியாவில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சிறிது அதிகரித்து வருவதாக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு பயன்படுத்தபப்டும் 20 முக்கிய மருந்துகள், இன்ஃப்ளூயன்ஸா மருந்துகளின் இருப்பு மற்றும் விலை கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு சில முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி வழங்கினார்.. கொரோனாவின் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்றும், நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்..
பொதுமக்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் நெரிசலான இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நடத்தையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.. நோயாளிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும் ஆய்வகங்கள் மூலம் கொரோனா பாசிட்டிவ் மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறையை மேம்படுத்தவும் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சோதனை-தடுப்பு-சிகிச்சை-தடுப்பூசி மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தை ஆகிய ஐந்து மடங்கு உத்தியை தொடர்ந்து கவனம் செலுத்துமாறு அவர் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனைகளில், மருத்துவ வசதிகளை அவசர சிகிச்சைக்கு தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்…
இதே போல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு , குறிப்பாக H1N1 மற்றும் H2N3 வகைகள், நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மோடி கேட்டுக்கொண்டார். இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2 மற்றும் அடினோவைரஸ் ஆகியவற்றிற்கான சோதனைகளை மாநிலங்களுடன் சேர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். போதுமான படுக்கைகள் மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் காய்ச்சலுக்கான தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.