எஸ்பிஐ வங்கி (SBI) ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in/careers மற்றும் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இதன் மூலம் காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2023 ஆகும்..
காலியிட விவரங்கள்
- மூத்த நிர்வாகி (புள்ளிவிவரம்): 01 பதவிகள்
- இடம்: AML/CFT, ஜெய்ப்பூர்
- CTC வரம்பு: ஆண்டுக்கு ரூ.15 முதல் 20 லட்சம்
- தகுதி: R&Python, Sequel இல் பணி அனுபவத்துடன் (புள்ளியியல்/கணிதம்/பொருளாதாரம்) முதுகலைப் பட்டம் (60%) முதல் பிரிவில் பெற்றிருக்க வேண்டும். பி.டெக் (ஐடி/சிஎஸ்), பி.ஜி.க்கு முன்னுரிமை வழங்கப்படும். கணினியில் டிப்ளமோ அல்லது PGDC மற்றும் MIS படித்திருக்க வேண்டும்…
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளம் bank.sbi/careers அல்லது sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் தங்களை ஆன்லைனில் பதிவு செய்து, இணைய வங்கி/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தேர்வு செயல்முறை: தேர்வு பட்டியல் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும், அதைத் தொடர்ந்து CTC பேச்சுவார்த்தை நடத்தப்படும்
பாரத ஸ்டேட் வங்கி SCO ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு இதோ : https://sbi.co.in/documents/77530/25386736/22022023_ADVERTISEMENT+NO.+CRPD-SCO-2022-23-32.pdf/979db93a-47b6-0388-b38e-157abbc07342?t=1677072467754