fbpx

12 இடங்களில் எலி மருந்து..!! குழந்தைகளின் இறப்புக்கு இதுதான் காரணம்..!! குன்றத்தூர் வழக்கில் அதிர்ச்சி தகவல்..!!

சென்னை குன்றத்தூரில் உள்ள வீட்டில் எலி மருந்து வைத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அருகே மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர், தனியார் வங்கி மேலாளர். இவரது வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதை கட்டுப்படுத்த எலி மருந்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, நிறுவனம் சார்பில் ஒரு ஊழியர் கிரிதரன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.

வீட்டின் உட்புறம் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்துச் சென்றுள்ளார். பின், இரவு உணவு சாப்பிட்டு மனைவி பவித்ரா (30), மகள் விஷாலினி (6), மகன் சாய் சுதர்சன் (1) ஆகியோருடன் கிரிதரன் படுத்து உறங்கினார். நேற்று காலை எழுந்ததும், அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர், இரு குழந்தைகள் என 4 பேரும் மீட்கப்பட்டு குன்றத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கிரிதரன்-பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குன்றத்தூர் போலீசார் விசாரித்து தி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை கைது செய்தனர்.

நிறுவன உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், ‘வீட்டின் அறையில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே இரண்டு குழந்தைகள் இறப்புக்கு காரணம்’ என்பது தெரியவந்தது. வேளாண் துறையில் கடிதம் கொடுத்துவிட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Read More : புற்றுநோயை உண்டாக்கும் உப்பு..!! அதிகளவு சேர்த்துக் கொண்டால் ஆப்பு..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

It was revealed that two children died due to the use of rat poison in 12 places instead of 3 places in the room of the house.

Chella

Next Post

மீண்டும் இணையும் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி..!! சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Nov 15 , 2024
Actor Jayam Ravi and his wife have been ordered to hold talks at the conciliation center.

You May Like