fbpx

ரேஷன் கார்டு – ஆதார் அட்டை..!! இந்த வேலையை முடிச்சிட்டீங்களா..? இன்றே கடைசி..!! இனி ரேஷன் கிடையாது..!!

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு. அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமல்ல. மக்கள் நலத் திட்டங்களில் உதவிகளைப் பெறுவதற்கு அவசியமாகிறது. சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, மற்றொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம்.. அதுவும் இல்லாமல், 1000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது.. மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்ற உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம்தான் கிடைக்கின்றன. அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர். அப்படி இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார்-ரேஷன் கார்டு இணைப்புக்கு இன்றே கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இப்பொழுதும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.. ரேஷன் கார்டை ஆதாருடன் விரைந்து இணைத்துவிட்டால், உங்களுடைய ரேஷன் கார்டு ரத்தாவதை தடுத்துவிடலாம்.

ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது..?

1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

2. இப்போது நீங்கள் ‘Start Now’ என்பதைக் கிளிக் செய்க.

3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.

4. இதற்குப் பிறகு ‘Ration Card Benefit’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.

6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.

8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

Chella

Next Post

சிலிண்டர் விலை குறைகிறதா..? நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள்..!! மக்களே ரெடியா..?

Fri Jun 30 , 2023
இன்றுடன் ஜூன் மாதம் முடிகிறது. நாளை ஜூலை துவங்க இருக்கிறது. மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாளை முதல், 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை. எல்பிஜி சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு […]

You May Like