ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.. இதில், பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு துறைகளில் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.. மேலும் குடும்பத்தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 உரிமைத் தொகைக்கான அறிவிப்பும் வெளியானது. இத்திட்டத்தினை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் எனவும் நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ வேளாண்மை செழித்து வளரும் திட்டங்களை வகுக்க தனி பட்ஜெட்டை அரசு உருவாக்கி உள்ளது.. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.. 2020-21-ல் ஒப்பிடுகையில், 2021-22-ல் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது..” என்று தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு
- 2,500 கிராம மக்களுக்கு ரூ.15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்..
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..
- ரேஷன் கடைகளில் கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும்
- மக்களுக்கு சிறு தானியங்களின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.82 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்
- கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்
- சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
- உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்..