fbpx

மக்களே…! ரேஷன் கார்டு தொடர்பான புகார்…! நாளை காலை 10 முதல் 1 மணி வரை சிறப்பு முகாம்…!

ரேஷன் அட்டை தொடர்பான புகார்களை சரி செய்வதற்காக நாளை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் அட்டையில் உள்ள வழங்கவும், குடும்ப குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறிவிட்டீர்களா?… வரும் 19, 20 தேதி சிறப்பு முகாம்!…. மிஸ் பண்ணிடாதீங்க!

Fri Aug 11 , 2023
மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் […]

You May Like