ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனை ஒன்று தமிழ்நாடு அரசு தரப்பில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே ரேஷன் கடை ஊழியர்களின் பணிகள் அபரிமிதமானது. பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ரேஷன் கடைகளை விடுமுறையின்றி திறந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. வேலைநாட்களுக்கு பதிலாக, வேறு நாட்களில் அந்த விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு ஈடுகட்டப்படுகின்றன. ரேஷன் கடைகளின் நேரம் கிராமப்புறங்களில் ஒரு மாதிரியும், நகர்புறங்களில் வேறு மாதிரியும் இருக்கும். நகர்ப்புறங்களில் காலை 8.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையும், பிறகு மதியம் 3 மணியில் இருந்து 7 மணி வரையும் பொருட்கள் வழங்கப்படும். கிராமப்புறங்களில் காலையில் 9 மணியில் இருந்து 1 மணி வரையும், பிறகு 2 மணி முதல் 6 மணி வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்பதால், இதுதொடர்பாக ரேஷன் கார்டுதாரர்கள் கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே லீவு கிடைக்கும்போது, எப்படி ரேஷன் பொருட்களை வாங்குவார்கள்? என்றும் அலுவலகம் செல்பவர்கள் கேட்கிறார்கள்?
English Summary : Tamilnadu government advice on Sunday holiday for ration shop employees
Read More : Admission | நாளை முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..!! வெளியான குட் நியூஸ்..!!