fbpx

விரைவில் தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்…! இனி கருவிழி ஸ்கேன் மூலம் ரேஷன் பொருட்கள்…!

கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கைரேகை பதிவு மூலம் பலருக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் உள்ள நிலையில் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வாங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்படும், பாக்கெட்டுகளில் அரிசி வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கருவிழியை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறும் நடைமுறை, முதற்கட்டமாக 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 2 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என கூறினார்.

Vignesh

Next Post

அக்.31க்கு வரைதான் டைம்!… அதன்பிறகு இதெல்லாம் செல்லாது!… வெளியான முக்கிய அறிவிப்பு!

Wed Oct 11 , 2023
வங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவ.முதல் ATM கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி தனது வடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகள் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக உங்கள் வங்கி கிளைக்கு சென்று […]

You May Like