தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது, வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வது, ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.