fbpx

மக்களே…! ரேஷன் கடைகளில் நாளை காலை 10 முதல் 1 மணி வரை மட்டுமே…! மிஸ் பண்ணிடாதீங்க…!

பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி- 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ 11.02.2023 அன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌, முகவரி மாற்றம்‌, கைபேசி எண்‌ பதிவு / மாற்றம்‌ செய்தல்‌ மற்றும்‌ புதிய குடும்ப அட்டை / நகல்‌ குடும்ப அட்டை கோரும்‌ மனுக்களை பதிவு செய்தல்‌ ஆகிய சேவைகள்‌ மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, நியாய விலைக்‌ கடைகளில்‌ பொருள்‌ பெற நேரில்‌ வருகை தர இயலாத மூத்த குடிமக்கள்‌ உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்‌.

மேலும்‌, பொது விநியோகக்‌ கடைகளின்‌ செயல்பாடுகள்‌, தனியார்‌ சந்தையில்‌ விற்கப்படும்‌ பொருட்கள்‌ அல்லது சேவைகளில்‌ குறைபாடுகள்‌ குறித்த புகார்கள்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ அவற்றை பொதுமக்கள்‌ இம்முகாமில்‌ தெரிவித்தால்‌ குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப்‌ பகுதிகளில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்கள்‌ இந்த சேவையினை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கோரத்தாண்டவம் ஆடிய நிலநடுக்கம்!... 5 முதல் 10 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி!... ஆய்வாளர்கள் தகவல்!

Fri Feb 10 , 2023
சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். துருக்கி- சிரியா எல்லையான காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே கடந்த 6 ந்தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற […]

You May Like