ரேஷன் கடைகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இன்று (ஜனவரி 13) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் 15, 16ஆம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். தற்போது ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.