பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில், இந்தப் போட்டியை சுவாரசியமாக நகர்த்தி செல்ல புது புது டாஸ்க்குகள், ரூல்ஸுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, எப்போது முதல் வாரம் நாமினேஷன் இல்லாத நிலையில், இந்த சீசனில் 2-வது நாளே நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்திருக்கிறது.
இந்த சீசனில் பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. கூல் சுரேஷ் – விஷ்ணு – மாயா ஆகிய மூன்று பேருக்கும் முட்டிக்கொண்டது. அதேபோல் கேப்டனுக்கும் பிரதீப்புக்கும் முட்டிக்கொண்டது. மேலும், விசித்திரா உடை குறித்து பேசிய விஷயமும் வீட்டுக்குள் மட்டுமின்றி வெளியிலும் விவாதம் ஆனது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் அசல் கோலார் ஹாட் டாபிக்காக இருந்தார். ஏனெனில், அவர் பெண்களுடன் கொஞ்சம் ஒட்டியே பழகிக்கொண்டிருந்தார். அதேபோல் இந்த சீசனின் அசல் கோலாராக ரசிகர்கள் மணிசந்திராவை பார்க்கின்றனர். அவரும் ரவீனாவும் ஏற்கனவே பழக்கமானவர்கள். எனவே, இவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மணிசந்திராவின் கையை ரவீனா கடித்தார். மேலும், தனது லிப்ஸ்டிக்கையும் அவரது கையில் தடம் பதித்தார்.
இந்நிலையில், மணிசந்திரா கையை ரவீனா கடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “ரவீனாவுக்கும் மணிசந்திராவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. இவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரியை இன்னும் சில நாட்களில் சொல்வார்கள். ரவீனா மணிசந்திராவின் கையை கடித்தார். அது காதல் கடியா இல்லை காம கடியா என்பது பற்றி சாலமன் பாப்பையாவை அழைத்து வந்து பட்டிமன்றம் நடத்த வேண்டும். அப்போதான் நல்லா இருக்கும்” என்று ஒரே போடாக போட்டார்.