fbpx

புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்..! என்ன சொன்னார் தெரியுமா?

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என ‘புதுமைப் பெண்’ திட்டத்தை அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்று பாராட்டியுள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் சாய்ரச்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜா அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார். இதையடுத்து, தங்கரதம் இழுத்து முருகனை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் ’’கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டத்தை துவக்கிவைத்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்..! என்ன சொன்னார் தெரியுமா?

மேலும், டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரவீந்திரநாத், ’’அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்ற டிடிவி தினகரன், சின்னம்மா என வரக்கூடிய அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து. அதுவே எனது கருத்தும். வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

Chella

Next Post

”இனி ஒன்றும் செய்ய முடியாது”..! குற்றங்களை கண்காணிக்க சமூக ஊடக குழு.! டிஜிபி அதிரடி

Tue Sep 6 , 2022
தமிழகம் முழுவதும் மாநகர, மாவட்ட காவல்துறையின் சார்பில் சமூக ஊடக குழு தொடங்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். Youtube, Twitter, Facebook போன்ற சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் உண்டாக்கி காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை கூர்ந்து கவனிக்க காவல்துறை சார்பில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதை […]
”இனி ஒன்றும் செய்ய முடியாது”..! குற்றங்களை கண்காணிக்க சமூக ஊடக குழு.! டிஜிபி அதிரடி

You May Like