நம்மில் பலர் நமது சம்பாத்தியம் முழுவதையும் வங்கிகளில் சேமித்து வைக்கிறோம். சேமித்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனா.. இனிமே, ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏனென்றால்.. வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் பண வரம்பை விட அதிகமாக எடுத்தால், நீங்கள் மிக அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். வங்கி கட்டணங்களும் பொருந்தும். எதெற்க்கெல்லாம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்த, விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
5 இலவச பரிவர்த்தனைக்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ATM பயனர்கள் ரூ. 21 என்ற தொகையை கட்டணமாக செலுத்தி வருகின்றனர். இந்த கட்டணத்தை இப்போது ரூ. 22 ஆக உயர்த்த (ATM transaction fee hike) RBI பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், NPCI என்ற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், ரொக்கமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான ATM பரிமாற்றக் கட்டணத்தையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு, ரூ. 17 என்ற கட்டணத்தில் இருந்த ATM பரிமாற்றக் கட்டணம் (ATM interchange fees hike) இனி ரூ. 19 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு (cashless transactions fee) இதற்கு முன்பு ரூ. 6 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி இந்த கட்டணம் ரூ. 7 ஆக உயர வாய்ப்புள்ளது (cashless transaction fee hike) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் அட்டை PNB வங்கியிலிருந்து பெறப்பட்டு, நீங்கள் வேறொரு வங்கியின் ATM-ல் இருந்து பணம் எடுத்தால், இந்த வரம்பை மீறினால் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
Read more : பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி.. படம் எப்படி இருக்கு..? விமர்சனம் இதோ..