fbpx

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் வந்த வினை..!! காவல்துறையின் வலையில் சிக்கியது எத்தனை பேர்..?

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அரசின் இந்த அறிவுறுத்தலை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாக கூறி 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல் மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கோவையில் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் நேற்று இரவு வரை 100 டன் அளவில் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவுக்குள் பட்டாசு கழிவுகள் முழுமையாக அகற்றப்படும் என்றும் மொத்தம் 200 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே!… இதை பின்பற்றவில்லையென்றால் அபராதம்!

Mon Nov 13 , 2023
ரயிலில் முதல் ஏசி, இரண்டாவது ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுடன் ஒப்பிடும்போது, பொது வகுப்பு டிக்கெட் விலை மிகக் குறைவு. இதுபோன்ற சூழ்நிலையில், குறுகிய தூர பயணத்தில் பணத்தை சேமிக்க, மக்கள் பெரும்பாலும் பொது வகுப்பில் பயணம் செய்கிறார்கள். இருப்பினும், ரயில்களில் இருக்கைகள் இல்லாததாலும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், மக்கள் நீண்ட தூரத்திற்கும் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் பொது வகுப்பு டிக்கெட்டுகள் ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே […]

You May Like