fbpx

மக்களே ரெடியா!… அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபர்!… நாடு முழுவதும் அக்.8 முதல் தொடக்கம்!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வரும் 8 முதல் தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேரம் முன்னதாகவே தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கிருந்தும், எந்த நேரத்திலும் ஷாப்பிங் செய்ய, பலவிதமான கட்டண தேர்வுகள் மற்றும் விரும்பும் மொழியில் வழங்கிவரும் அமேசான், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகைகளை வழங்கியுள்ளது. அமேசான் பே லேட்டர் மூலம் ஷாப்பிங் செய்து அடுத்த மாதம் பணம் செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் வரை உடனடி கிரெடிட் வசதி வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் இலவச அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் 5% வரம்பற்ற கேஷ்பேக் சலுகையை பெறலாம். பரிவர்த்தனைகள் மற்றும் கட்டணமில்லா இஎம்ஐ மூலம் இந்த பண்டிகைக் கால ஷாப்பிங்கை வாடிக்கையாளர்கள் அமேசான் பே கிஃப்ட் கார்டுகளை வாங்கினால் 10% வரை பணம் திரும்பப் பெறலாம். மேலும் சுற்றுலா செல்லும்போது ஹோட்டல்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான விமானங்கள், ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பலவற்றில் 40% வரை கட்டண சலுகையை பெறலாம்.

சாம்சங், ஒன்பிளஸ், ஐக்யூ, சோனி போன்ற பிராண்டுகளிலிருந்து ஸ்மார்ட்போன்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் என பல பிரிவுகளில் வாடிக்கையாளர்களுக்காக 5,000-க்கும் மேற்பட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் போட், இன்டெல், பாஸ்ட்ராக், டாமி ஹில்பிகர், விப்ரோ, ஏசியன் பெய்ன்ட்ஸ், ஹக்கிஸ் மற்றும் பலவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி, கட்டணமில்லா இஎம்ஐ வசதி, பிற முன்னணி வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

Kokila

Next Post

சமைக்குற இடத்துல இந்த பொருளை வைக்காதீங்க..!! காரணம் தெரிஞ்சா நீங்களும் இப்படி பண்ண மாட்டீங்க..!!

Mon Oct 2 , 2023
நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களிலும் அறிவியல் கலந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் கூட ஒவ்வொன்றையும் தெளிவாக புரிய வைத்துள்ளனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் அற்பமாக எண்ணி அவற்றை பின்பற்ற மறந்து விடுகிறோம். அந்தவகையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை அடுப்பின் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். […]

You May Like