fbpx

வட்டியுடன் அபராதம் செலுத்த தயாரா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! அசால்ட்டா இருக்காதீங்க..!!

2022-2023ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான முதல் காலக்கெடு ஜூலை 31, 2023 அன்றே முடிவடைந்தது. பின்னர், 2023-2024ஆம் ஆண்டிற்குள் தாமதமான வரி செலுத்துவோர் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, இந்த காலக்கெடு தனிநபர்கள், நிறுவனங்கள், தணிக்கைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படாதவர்கள் உட்பட அனைத்து வரி செலுத்துவோருக்கும் இது பொருந்தும்.

குறிப்பிட்ட தேதிக்கு முன் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய தவறியவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், அபராதமாக 5,000 ரூபாயும், மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் வரி செலுத்துவோர் குறைக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூ.1,000 மட்டுமே செலுத்த வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், வரி செலுத்துவோர் தாமதமாகத் தாக்கல் செய்தால், பிரிவு 234A-ன் கீழ் வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டி ஒவ்வொரு மாதத்திற்கும் 1 சதவிகிதம் அல்லது ஒரு மாதத்தின் ஒரு பகுதி, செலுத்தப்படாத வரியின் அளவு கணக்கிடப்படுகிறது. ஆகவே டிசம்பர் 31,2013-க்குள் நீங்கள் தாமதமான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லையென்றால், வட்டியுடன் அபராதம் கட்ட வேண்டி வரும்.

Chella

Next Post

நாடாளுமன்ற தேர்தல்..!! 40/40 தொகுதிகளையும் தன்வசமாக்கும் திமுக..!! மற்ற கட்சிகள்..? கருத்துக் கணிப்பு முடிவுகள்..!!

Thu Dec 14 , 2023
இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால், பாஜகவின் வெற்றிக்கு தடை போட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ‛இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் […]

You May Like