விஜய் டிவியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிற நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்து வரும் நிலையில், தற்போது சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிற நிலையில், அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றார்.
தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியில் இளம் பாடகரான இவர் மீது நல்ல எண்ணம் இருந்த நிலையில், நாள்போக்கில் இவர் நாளுக்கு நாள் செய்யும் செயல்கள் மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கும் விதமாக அமைந்தது.
கடந்த வாரம் இவர் எலிமினேட் செய்த பிறகு எல்லோரையும் போல இந்நிகழ்ச்சியை பற்றிய ஏதாவது பதிவு செய்வார் என்று நினைத்த போது இதுவரை எதுவும் அவ்வாறு செய்யவில்லை.
தற்போது தன் மீதான விமர்சனங்கள் பற்றி அசல் கூறியதாவது, “பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது என்னுடைய உறவினர் வீட்டில் இருப்பது போன்றே நான் உணர்ந்தேன். மேலும் என்னுடைய அச்செயல் ரசிகர்களுக்கிடையே கோபத்தை உண்டாக்கினால் நான் அதை மாற்றிக் கொள்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.