ஒரு சிலருக்கு எப்போதும் வாயில் புண்கள் வரும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் பேச முடியாமல் அவர்கள் அவதி படுவது உண்டு. ஒரு சிலர் வாய்ப்புண் அடிக்கடி வந்தால், கேன்சர் வந்துவிடுமோ என்ற சந்தேகம் இருக்கும். ஏன் இது போன்ற புண்கள் அடிக்கடி வருகிறது என்ற அச்சமும் இருக்கும். உங்களுக்கான விடையை தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.. ஆப்தஸ் அல்சர் (Aphthous ulcers) எனப்படும் வாய்ப்புண் பதினைந்து நாள்களுக்கொரு முறை வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. சிலர் பிரஷ் செய்யும் முறையாலும், சீரற்ற பல் வரிசையாலும் வாய்ப்புண் வரலாம். பேசும் போதும், சாப்பிடும் போதும் பற்கள் சுற்றி இருக்கும் திசுக்களுடன் உரசி வாய்ப்புண்கள் ஏற்படும்.
வைட்டமின் ஏ, பி மற்றும் சி சத்துக் குறைபாடுகள் இருந்தால் அடிக்கடி வாய்ப்புண் ஏற்படும். அது மட்டும் இல்லாமல், வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது ஆகியவை சூடாக குடித்தால் வாய்புண் வரும். எண்ணெய்ப் பண்டங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் வகை பழங்களை அதிகம் சாப்பிட்டாலும் வாய்ப்புண்கள் வரலாம். மேலும், வாய்புண் வரும் போது மாத்திரை கொடுப்பது தீர்வு கிடையாது. இதற்கு பதில், தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம். மேலும் தினமும் ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. காலையும் இரவும் கட்டாயம் பல் துலக்க வேண்டும். `க்ரான்ஸ் டிசீஸ்’ (Crohn’s disease) எனப்படும் ஆட்டோஇம்யூன் பிரச்னை இருந்தாலும் அடிக்கடி வாய் புண் ஏற்படும். க்ரான்ஸ் டிசீஸ் இருந்தால், வயிறு, வாய், ஆசனவாய் என எல்லா இடங்களிலும் புண்கள் ஏற்படலாம்.