fbpx

திருமணமான ஆண்களுக்கு மற்ற பெண்கள் மீது ஈர்ப்பு வர என்ன காரணம்? உளவியல் பார்வையில்..

ஒருவர் திருமண பந்தத்திற்குள் நுழைந்தவுடன் தனது பார்ட்னருக்கு உண்மையாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர், ஆனால், மக்கள் ஏன் திருமணத்திற்குப் புறம்பான உறவுக்குள் நுழைகிறார்கள் என்பது பற்றி எப்போதாவது தான் விவாதிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள மூல காரணத்தை முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நபர் தனது வாழ்க்கை துணையை ஏமாற்ற ஏன் நினைகிறார் என்பதற்கான பொதுவான சில உலவியல் காரணங்களை பார்ப்போம்.

இளவயது திருமணம் : 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டவர்கள் சில ஆண்டுகள் சென்ற பின் தங்களது இளவயது வாழ்க்கையை என்ஜாய் செய்யவில்லையோ என்று இளம்தலைமுறையினரை பார்த்து ஏங்குவார்கள். எப்படியாவது வாழ்க்கையை என்ஜாய் செய்ய விடும் என்ற எண்ணம் மேலோங்கும்போது வாழ்கை துணையை பற்றியும், குடும்பத்தை பற்றியும் யோசிக்காமல் திருமணத்திற்கு மீறிய பந்தத்தை நாடி டேட்டிங் செய்கிறார்கள். இது அவர்களுக்கு உற்சாகம் தருவதால் தவறு என்று நினைக்க மாட்டார்கள்.

வெவ்வேறு இலக்குகள் : கணவன் மனைவி இருவரும் வேறுபட்ட இலக்குகளைக் கொண்டிருந்தால், அது காலப்போக்கில் தூரத்தை உருவாக்கலாம். உறவின் தொடக்கத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஒரு கவலையாக இருக்காது என்றாலும், நேரம் செல்ல செல்ல கசப்பு உருவாகலாம். இது உறவில் விரிசல்களுக்கு வழிவகுக்கும், இதனால் ஒருவர் விலகிச் செல்கிறார்.

வெளியே ஆறுதல் : சிலர் தங்களது திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டால் துணையுடனோ அல்லது பெரியவர்களிடமோ பேசி பிரச்சனையை தீர்க்க பார்ப்பத்தில்லை. மாறாக வெளியே ஆறுதல் தேடுகிறார்கள். ஆறுதலுக்காக வெளியில் இருந்து வரும் கை தங்களை அணைக்கும் அளவிற்கு இடம் கொடுத்து விடுகிறார்கள். இதனாலேயே பெரும்பாலான கள்ள தொடர்பு உறவுகள் ஏற்படுகிறது.

பூர்த்தி இல்லாமை :  ஆண்களின் மனம் மிகவும் நெகிழ்வானது, அவர்கள் எதையாவது அனுபவிக்கவில்லை என்றால், அவர்கள் உடனடியாக அதை விட்டு விலகிவிடுவார்கள். ஆனால் திருமணமான உறவில் அவரால் அதைச் செய்ய முடியாது. தாம்பத்திய வாழ்வில் மனைவியிடமிருந்து தனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை என்று உணரத் தொடங்கும் போது,   அவர் தனது மனைவியை விட்டு வெளியேறி மற்ற பெண்களிடம் ஈர்க்கப்படுகிறார்.

அதே சமயம் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே தங்களுக்கு வயதாகும் போது அல்லது உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் போது தங்களுக்கு இன்னும் பிறரை கவர்ந்து இழுக்கும் வசீகரம் இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் இது போன்ற உறவில் ஈடுபடுகிறார்கள்.

இயற்கையான போக்குகள்: உளவியலாளர்களின் கூற்றுப்படி, மூளையில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் நமது தார்மீக தீர்ப்பைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் விவேகமான முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஏமாற்றும் போக்கு உள்ளவர்கள் மற்றவர்களை எளிதில் ஏமாற்றலாம். ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு முன், அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வது புத்திசாலித்தனம். குறிப்பாக, முந்தைய துணைக்கு துரோகம் செய்த ஒருவர் உங்களுக்கும் அதையே செய்யலாம்.

சமூகத்திலிருந்து உதாரணம் : ஒழுக்கக்கேடு மிக்க திருமணமானவர்களை பார்க்கும் சிலர் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பது இந்த காலத்தில் சகஜமானது போல. அப்படி இல்லாவிட்டால் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள் என்று நினைக்கும் சிலர் பாதைமாறி சென்று துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.

Read more ; கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் மகள் படிக்கும் பள்ளியின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

English Summary

Reasons Men Are Attracted to Other Women Despite Having a Partner

Next Post

Jobs: BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு... மாதம் ரூ.20,000 வரை ஊதியம்...!

Mon Sep 23 , 2024
Bel announced job notification

You May Like