fbpx

மூக்கடைப்பு தொண்டை வலியை உடனடியாக சரி செய்யும் இஞ்சி சட்னி.! எப்படி செய்யலாம்.!

பொதுவாக நம் பலரது வீட்டிலும் உள்ள சமையலறையில் இருக்கும் இஞ்சி பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களைக் கொண்டது. அசைவ உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சியை தினமும் நாம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். குறிப்பாக சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான மூக்கடைப்பு, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, தலைவலி போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். இதன்படி கொஞ்சம் வித்தியாசமான ஸ்டைலில் இஞ்சி சட்னி காலையில் செய்து சாப்பிட்டு பாருங்க?

இஞ்சி சட்னி செய்ய தேவையான பொருட்கள்
கழுவி நறுக்கிய சிறிய இஞ்சி துண்டுகள் – 1/2 கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -5, புளி – 1 எலுமிச்சம் பழ அளவு, உப்பு, எண்ணெய், கருவேப்பிலை, கடுகு – தேவையான அளவு, வெல்லம் – 1 ஸ்பூன்.

செய்முறை:முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் இஞ்சி துண்டுகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பின்பு ஒரு மிக்ஸியில் வதக்கிய அனைத்தையும் எடுத்து போட்டு புளி ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து ஊற்ற வேண்டும். இதில் உப்பு, வெல்லமும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து விட்டு இதில் கடுகு போட்டு தாளித்து ஊற்றினால் சுவையான ஆரோக்கியமான இஞ்சி சட்னி தயார்.

Baskar

Next Post

சருமம் தங்கம் போல ஜொலிக்கனுமா.! இந்த குளியல் பொடி வீட்டிலேயே செய்து பாருங்கள்...!

Fri Feb 9 , 2024
பொதுவாக ஒவ்வொருவரும் நம் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அதற்காகவே கடைகளில் விற்கப்படும் சோப்புகளை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம் சேர்க்கப்படுவதால் இது நம் சருமத்திற்கு பாதிப்பை தருகிறது. மேலும் 30 வயதிற்கு மேல் தோல் சுருக்கம், தோல் வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை தருகிறது. இவ்வாறு நம் சருமம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இயற்கையாக கெமிக்கல் சேர்க்காத […]

You May Like