fbpx

பொங்கலன்று பல காய்கறிகளை வைத்து இப்படி அவியல் செய்து பாருங்க.!?

பொதுவாக பொங்கல் திருநாள் அன்று பல காய்கறிகளை வைத்து குழம்பாக செய்து பால் பொங்கலுக்கு வைத்து கொள்வார்கள். எல்லா வருடமும் இப்படி குழம்பு செய்வதற்கு பதிலாக இந்த வருடம் வித்தியாசமாக பல காய்கறிகளை வைத்து குழம்புடன், அவியலும் செய்து பாருங்கள். அவியல் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

அவரக்காய், புடலங்காய், கத்திரிக்காய், மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், சக்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, மொச்சை – தேவையான அளவு நறுக்கிய காய்கறிகள்
பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி அளவு, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு – 1ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து தேங்காய் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
முதலில் குக்கரில் ஒரே அளவு நறுக்கிய காய்கறிகளை முழுவதுமாக போட்டு அதில் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விட வேண்டும். துருவிய தேங்காயை அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். அதில் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் கலவையையும் சேர்க்க வேண்டும். பின்பு தண்ணீர் வற்றி தேங்காய் கலவை காய்கறியுடன் நன்கு சேர்ந்து வரும். பின் கிளறி விட்டு இறக்கினால் சுவையான காய்கறி அவியல் ரெடி.

Rupa

Next Post

பப்பாளி தண்ணீர் பற்றி கேள்வி பட்டு உள்ளீர்களா.? என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

Mon Jan 15 , 2024
பொதுவாக பழ வகைகளில் பப்பாளி பழம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உயரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. அப்படியிருக்க பப்பாளிப்பழ விதைகளை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்? இரவு நேரத்திலேயே பப்பாளி விதைகளை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு அதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் […]

You May Like