சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். அதன் விபரம் வருமாறு:
காலி பணியிடங்கள் ;
‛ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ்’ (Process Executive)
சீனியர் ப்ராசஸ் எக்ஸிக்யூடட்டிவ் (Senior Process Executive)
என்னென்ன தகுதி ?
- இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- பிஇ, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
- மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை, அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், எம்எஸ் ஆபிசில் பணியாற்றும் திறமை, எக்ஸ்எல்லில் திறமையாக வேலை செய்வது உள்ளிட்ட திறமைகளை கொண்டிருக்க வேண்டும்.
- பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
- டிஜிட்டல் டொமைன் SAP or Navigo Application அனுபவம் இருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும்
- சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நைட் ஷிப்ட், தேவையென்றால் வார இறுதி நாட்களிலும் பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணிக்கான மாதசம்பளம் என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் தற்போதைய பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் விண்ணப்பம் முடிவுக்கு வரலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது.