fbpx

அக்னிவீர் விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு…! ஜூலை 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்வு 18.10.2024 அன்று நடைப்பெறவுள்ளது. இத்தேர்விற்கு இணையவழியில் 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். அக்னிவீர்வாயு தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.

இத்தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகள் அல்லது தொழில் படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையலாம்.

English Summary

Recruitment under Agniveer Vayu Air Force Scheme.

Vignesh

Next Post

16 முறை உலக சாம்பியன்!. WWE ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு!. ரசிகர்கள் அதிர்ச்சி!

Sun Jul 7 , 2024
John Cena announces WWE retirement, to finish up with company in 2025

You May Like