fbpx

தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட்..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..? மக்களே பாதுகாப்பா இருங்க..!!

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 17) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்..!! ரூ.70 லட்சத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!! எப்படி இணைவது..?

English Summary

In Tamil Nadu, Kanyakumari, Tenkasi and Nellai districts have been issued a red alert for very heavy rains.

Chella

Next Post

Tn Govt: பட்டதாரி ஆசிரியர் பணியிடம்... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!

Sat Aug 17 , 2024
Post Graduate Teaching... Publication of Guidelines.

You May Like