fbpx

ரெட் அலெர்ட்!. சென்னைக்கு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு!.

Helpline Numbers: ரெட் அலெர்ட் எச்சரிக்கையை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 17-ம் தேதி வரைதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (அக்.15) கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், சென்னையில் நேற்று(அக்.14) இரவு பெய்த கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி, 1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியின் மழையின் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல், தாம்பரம் மாநகராட்சிக்கு 18004254355,18004251600,வாட்ஸ் ஆப் எண்: 8438353355 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: Womens T20 Worldcup!.வெளியேறியது இந்திய அணி!. PAK.ஐ வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசி!.

English Summary

Red Alert! Notification of emergency helpline numbers for Chennai!

Kokila

Next Post

கவனம்..! இன்று நடைபெற இருந்த பி.எட் கலந்தாய்வு கனமழை காரணமாக ஒத்தி வைப்பு...!

Tue Oct 15 , 2024
Today's B.Ed consultation has been postponed due to heavy rain

You May Like