fbpx

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தொடர் கனமழை காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கேஸ் சிலிண்டர்..!! இனி வீட்டிலிருந்தே இந்த வேலையை முடிக்கலாம்..!! ரொம்ப முக்கியம்..!!

Mon Dec 18 , 2023
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கேஒய்சி விவரங்களை வழங்க விரும்பினால், எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. E-KYC வீட்டில் இருந்தே செய்ய முடியும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோம். பலர் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று தங்கள் கேஒய்சி விவரங்களைத் தருகின்றனர். E-KYC-ஐ வீட்டில் இருந்தும் ஆன்லைனிலேயே முடித்துவிட முடியும். இது கடினம் அல்ல. முதலில் www.mylpg.in தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே வலது பக்கத்தில் பாரத் கேஸ்/HP கேஸ்/இண்டேன் சிலிண்டர் […]

You May Like