fbpx

கவின் நடிக்கும் டாடா படத்தினை வெளியிடும் ரெட் ஜெயண்ட் : ரசிகர்கள் உற்சாகம்…!

நடிகர் கவின் நடிக்கும் டாடா படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து அவர் நடித்த லிஃப்ட் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள டாடா. படத்தில் கவின் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் படத்தை வெளியிடுவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Kokila

Next Post

சீனா, ஹாங்காங் பயணிகள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடு : அமெரிக்க நோய் தடுப்பு மையம் அதிரடி...!

Sun Jan 1 , 2023
சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட […]

You May Like