fbpx

இளைஞர்களே…! ரிசர்வ் காவல் படையில் 20,000 கான்ஸ்டபிள் காலி பணியிடங்கள்…! உண்மை என்ன..?

ரிசர்வ் காவல் படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரிசர்வ் காவல்படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த பத்திரிகை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் காவல் படை அல்லது ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என பிஐபி தெரிவித்துள்ளது.

போலி செய்திகளை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

Vignesh

Next Post

வணிக சிலிண்டர் விலை ரூ.91.50ஆக உயர்வு...! சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை...!

Sat Apr 1 , 2023
இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.91.50 உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக இப்போது டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.2,028 ஆக இருக்கும். சமையல் எல்பிஜி எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் விலை கடந்த மாதத்தைப் போலவே உள்ளது. கடந்த மாதம், மத்திய அரசு வீட்டு […]

You May Like