fbpx

Priyanka Vs Manimegalai | ஐயோ என்ன விட்டுருங்க.. அதபத்தி என்கிட்ட கேக்காதீங்க..!! – மாகாபா இப்படி சொல்லிட்டாரே!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார் மணிமேகலை. அவர் சனிக்கிழமை ஒளிபரப்பான அரையிறுதி சுற்றின் முதல் எபிசோடில் பாதியிலேயே சென்றுவிட்டார். பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி வருவதாலும் அது பிடிக்காததாலும், சுய மரியாதை முக்கியம் என்பதாலும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. பிரியங்கா பற்றி பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். பிரியங்கா மீது தங்களுக்கு இருக்கும் கோபங்கள் இப்போது கமண்டுகளாகவும் மீம்ஸுகளாகவும் இணையத்தில் பரவுகிறது. இந்த நிலையில் பிரியங்காவோடு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் மாகாபா பேசுகையில் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. அதனால் எனக்கு அங்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலவரம் தெரியாது. அதனால் நான் இவருக்கு தான் சப்போர்ட் என்று சொல்ல முடியாது. நாம் ஒரு காட்டுக்குள் ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நாம போய் அதில் தடுக்க முடியாது.

அப்படி தடுத்தால் நமக்கே பிரச்சனையாகும். அந்த யானைகள் நம்மை தூக்கிப்போட்டு கொன்றுவிடும். அதுபோல பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியே போனது அவருடைய கருத்து. அதில் நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று மாகாபா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.

Read more ; Priyanka Vs Manimegalai | நீங்க பேசுறது டிஸ்டர்ப் ஆகுது.. உன்ன இந்த ஷோவ விட்டு அனுப்புறேன் டி..!! – CWC செட்டில் இருந்து லீக் ஆன ஆடியோ..

English Summary

Regarding the clash between contestant Priyanka and Manimegala on Cook With Komali,
Magaba has expressed his opinion.

Next Post

குக் வித் கோமாளி பைனல் முடிந்தது..!! வின்னர் இந்த பிரபலம் தானாம்..!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

Mon Sep 16 , 2024
After the finale of the 5th season of Cook with Komali, the winner has been announced.

You May Like