மத்திய மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களுக்கும் அழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற பழைய வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவால், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனைத்து அரசு வாகனங்களின் பதிவும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் இந்த புதிய உத்தரவு ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும். மத்திய, மாநிலம், யூனியன் பிரதேசம், முனிசிபல் கார்ப்பரேஷன், மாநில போக்குவரத்து மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களுடன் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களும் ரத்து செய்யப்பட வேண்டும். ஆனால், ராணுவ வாகனங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
பதிவு புதுப்பிக்கப்பட்ட வாகனங்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இதுபோன்ற பழைய வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட ஸ்கிராப் மையத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய, மாநில அரசுகளின் 15 ஆண்டுகள் பழமையான அனைத்து வாகனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைவு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.