சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியின் உடல்நிலை தொடர்ந்து சோர்வடைந்ததால், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 11ஆம் வகுப்பு மாணவன் தான் காரணம் என்பது தெரியவந்தது.
இருவரும் ஒன்றாக சேர்ந்து படிப்பதாகக் கூறி மாணவனும், மாணவியும் அடிக்கடி தனிமையில் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக தற்போது மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவனிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.