fbpx

சீனாவில் உடல்களை தகனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் உறவினர்கள் – அதிர்ச்சி வீடியோ!

சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றின் புதிய திரிபு மிக வேகமாக பரவி வருகிறது. தற்போதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்களை தகனம் செய்ய மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ!

இந்நிலையில் சுகாதார நிபுணர் எரிக் பீகல்-டிங் என்பவர் தன் டிவிட்டரில் பகிர்ந்த வீடியோவில், கொரோனாவால் உயிரிழந்த உடல்களை தகனம் செய்வதற்காக அவர்களது உறவினர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து எடுத்துச் செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுகாடுகளில் நீண்ட வரிசைகள் – உங்கள் அன்புக்குரியவர்களை தகனம் செய்ய காத்திருக்காமல், ஒதுக்கப்பட்ட அந்த நேரங்களுக்கு அவர்களின் இறந்த உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று வீடியோவுடன் டாங் என்பவர் டுவீட் செய்துள்ளார்.

Kokila

Next Post

வெறும் 400 ரூபாய் பாக்கிக்காக கட்டிட தொழிலாளி கொடூர கொலை!

Mon Dec 26 , 2022
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் […]

You May Like