fbpx

’தென்மாவட்டங்களுக்கு இன்னும் 3 நாட்களில் நிவாரணத் தொகை’..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..!!

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கிய பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. இதனால் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள், கூடுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்த கணக்கீடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் படிப்படியாக தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை குறித்து 3 நாட்களில் அறிவிக்கப்படும்.

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சூலூரில் உள்ள விமானப்படை மூலம் மீட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ரயிலில் சிக்கிய பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் உணவு தயாரிக்கப்பட்டு ராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Chella

Next Post

மதுரை மக்களே எச்சரிக்கை!… டெங்கு பாதிப்பில் முதலிடம் பிடித்ததால் அச்சம்!

Mon Dec 18 , 2023
டெங்கு பாதிப்பு குறைவான மாவட்டங்களில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பாதிப்பு அதிகரிப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், மழைக்கால நோய்களால் அவ்வபோது டெங்கு காய்ச்சல் அதிகரிக்கிறது. அந்தவகையில், வடகிழக்கு பருவமழை […]

You May Like