fbpx

சோகம்… ஆன்மீக சுற்றுலாவின் போது 6 பேர் உயிரிழப்பு…! ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்…!

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில்; ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம்… மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ், பிருத்விராஜ், ஸதாவீதுராஜா பிரவீன்ராஜ் என்ற வயது 19 இளைஞர், ஈசாக் மற்றும் செல்வன். அண்டோ கெரிமஸ் ரவி ஆகிய ஆறுபேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Vignesh

Next Post

பொதுமக்களே கவனம்... இனி மருந்து வாங்க போகும் போது இதை எல்லாம் கவனமாக பாருங்க...! இல்லை என்றால் ஆபத்து..‌‌.

Wed Oct 5 , 2022
போலி மருந்துகளை எளிதில் கண்டறிய மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து பாதுகாப்பானதா இல்லையா என்பது பலருக்கும் உறுதியாக தெரியாது. ஆனால் அதில் எது போலி என்பதற்கும் உண்மையானது என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டுபிடிப்பது..? இந்த அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில், தரமற்ற மற்றும் போலிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் […]

You May Like