fbpx

“ மீண்டும் கோலோச்ச நினைக்கும் மதவாத சக்திகள்.. அதை தடுக்க போராட வேண்டும்..” கேரளாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது உரையாற்றிய அவர் “ வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.. தமிழக கோயில் நுழைவு போராட்டங்கள் நடத்த தூண்டுதலாக இருந்தது வைக்கம் போராட்டம்.. வைக்கம் மண்ணில் நிற்பது பெருமை தருகிறது.. பெரியார் 64 நாட்கள் கேரளாவில் தங்கி போராடினார்.. மொத்தம் 141 வைக்கம் போராட்டத்திற்காக தன்னை ஒப்படைத்து கொண்டார் தந்தை பெரியார்.. இதை தொடர்ந்து வைக்கம் கோயில் சாலைகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டது.. தமிழக – கேரள தலைவர்கள் சேர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இன்று நாம் கொண்டாடி வருகிறோம்..

நேற்று முன் தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், வைக்கம் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்யவிருப்பதாக நான் கூறினேன்.. பெரியார் நினைவகம் சீரமைக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. தந்தை பெரியார், தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்குமான தலைவர்.. அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் அனைத்து நாட்டுக்கும் பொதுவான சிந்தனைகள்..

சுய மரியாதை, பகுத்தறிவு, சம தர்மம், சமத்துவம், மானிடப்பற்று, பால் பேதமின்மை, சுய முன்னேற்றம், சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், பெண்கள் முன்னேற்றம் இவை தான் பெரியாரியத்தின் அடிப்படை.. இதை வென்றெடுக்க நாம் உழைத்தாக வேண்டும்.. மீண்டும் சனாதன, வர்ணாஸ்ரம, சாதியவாத, மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்த கடமை அதிகம் இருக்கும்.. நமக்கு பெரியார் என்ற பெருவிளக்கு பயன்படும்.. வைக்கம் போராட்டம், கலங்கரை விளக்காக அமையும்.. ” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

#விருதுநகர் : மனவளர்ச்சி இல்லாத சிறுமிக்கு.. 3 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு.!

Sat Apr 1 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகில் மணிகண்ட ராஜா (வயது 24) அலெக்ஸ் பாண்டியன் (வயது 23) விக்னேஷ் (வயது 20) இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு 17 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

You May Like