fbpx

வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக, இந்த தவறுகளை இனி கண்டிப்பாக பண்ணாதீங்க.!?

பொதுவாக நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது, சூரிய உதயத்திற்கு பின்பு தூங்காமல் இருப்பது, சூரியன் மறைவதற்கு முன்பாக விளக்கு வைப்பது, பூஜை அறையில் தினமும் பூஜை செய்வது போன்ற ஒரு சில விஷயங்களை செய்வது லட்சுமி கடாட்சமாக இருப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும் பெருகும். ஆனால் ஒரு சில விஷயங்களை செய்வதனால் வீட்டில் துரதிஷ்டம் அதிகமாகும். அவை என்ன என்ன விஷயங்கள் என்பதை குறித்து பார்க்கலாம்.

முதலில் பெண்கள் காலையில் எழுந்தவுடன் படுக்கையை முழுவதுமாக மடித்து வைத்து தலையை சரி செய்து விட்டு தான் வாசல் கதவை திறக்க வேண்டும். அப்படி இல்லாமல் தலைமுடி சீராக இல்லாமல் கதவை திறந்தால் வாசலில் இருக்கும் லட்சுமி வீட்டிற்குள் வராமல் துரதிஷ்டம் உருவாகும்.

இவ்வாறு செய்வதால் கஷ்டங்கள் பெருகும், அடிக்கடி கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும், வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனை செலவு அதிகரிக்கும். மேலும் சமையலறைக்கு செல்லும் முன்பாக முழுவதுமாக குளித்துவிட்டு சுத்தமாக செல்ல வேண்டும்.

சமையல் அறையில் இருக்கும் அடுப்பை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தான் சமையல் வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஆறு மணிக்கு மேல்  வீட்டை பெருக்கக் கூடாது, வீட்டை பெருக்கினாலும் குப்பையை வெளியே கொட்ட கூடாது. பெண்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் தலை வாரக்கூடாது.

வீட்டில் சர்க்கரை, பருப்பு, அரிசி, உப்பு, கடுகு போன்ற பொருட்கள் எப்போதும் குறைவில்லாமல் நிறைவாகவே இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருள் இல்லை என்றால் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. இப்படி இல்லை என்று கூறும்போது நமக்கு எதுவும் இல்லாமலே போய்விடும் என்று சாஸ்திரத்தில் கூறியுள்ளனர். ஒரு சில செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் வீட்டில் கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி பெருகும்.

Baskar

Next Post

திமுக-வின் 4-வது ஊழல் பட்டியல்!… ஸ்டாலின் வருகைக்காக காத்திருக்கிறேன்!… அண்ணாமலை அதிரடி!

Thu Feb 1 , 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்து தாயகம் வந்தவுடன், தி.மு.க.வின் 4-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை நேற்று 2-வது நாளாக மேற்கொண்டார். செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் நேற்று நடைபயணம் செய்தார். அப்போது பேசிய அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ […]

You May Like