ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ரெப்கோ நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒன்பது காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக தற்போது தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி, பி.சி.ஏ, பி.இ/ பி .டெக், சி.ஏ/ சி.எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்.சி, எம்.பி.ஏ, எம் .சி.ஏ, எம்.இ/ எம்.டெக் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 40 ஆகும். இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாத ஊதியமாக 54,166/- ரூபாய் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வேலை வாய்ப்பிற்கு ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குனர், ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், எண்.634, கருமுத்து மையம், 2வது தளம், வடக்குப் பகுதி, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-600035. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக 31 .03..2023 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் 700 ரூபாய் மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிகளுக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் 500 ரூபாய் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய repcomicrofin.co.in என்று இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.