fbpx

செம்மரக் கட்டைகளுக்கான வர்த்தக செயல்முறையின் மதிப்பாய்விலிருந்து இந்தியா நீக்கம்…! மத்திய அமைச்சர் தகவல்

அண்மையில் முடிவடைந்த, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம் குறித்த நிலைக்குழு கூட்டம், இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதள பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “வனவிலங்குச் சட்டத் திருத்தத்தின் விளைவாக, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தத்தின்படி இந்திய சட்டத்தின் வகை 1 -ல் இந்தியாவின் சி.ஐ.டி.இ.எஸ் சட்டம் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா செம்மரக்கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வர்த்தக மறுஆய்வு நடைமுறையில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். நமது இணக்கம் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், செம்மரக்கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வர்த்தக மதிப்பாய்வில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். செம்மரக்கட்டைகள் பயிரிடும் விவசாயிகள், தோட்டங்களில் இருந்து செம்மரக்கட்டைகளை சாகுபடி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், நிலையான வருமான ஆதாரமாக அதிக செம்மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

4 மாதத்தில் ரூ.8 லட்சம் சம்பாதிக்கலாம்..!! விவசாயிகளே உங்கள் நிலத்தில் இதை டிரை பண்ணி பாருங்க..!!

Tue Nov 14 , 2023
4 மாதத்தில் ரூ. 8 லட்சம் வரை லாபத்தை கொடுக்கும் சியா பயிர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது. சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். இதை எப்படி உபயோகித்தாலும் முதலில் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் […]

You May Like