முட்டை பிரியர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். காலை மதியம் மற்றும் இரவிலும் சிலர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்காக மொத்தமாக முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கும் நடைமுறையானது எல்லார் வீட்டிலும் தறபோது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.
ஆய்வுகளில் இப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது என கூறுகிறது. ஏனென்றால் முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் முட்டையின் சுவை குறைந்து விடுகிறது. மற்றும் அதனால் வரும் பாதிப்புகளும் அதிகமாக உள்ளது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வீட்டில் அறை வெப்பநிலையில் பராமரிக்கப்படும் முட்டைகளை காட்டிலும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் முட்டைகள் விரைவாக கெட்டுப்போய் விடும். அத்துடன் பாலினை போல் இவைகளும் திரிந்து விடும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இவ்வாறு பயன்படுத்த வேண்டாம் என சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more ; “சகோதரிடன் ஓடிய கணவர், அம்மா-வுடன் ஓடிய மாமனார்” நீதி கேட்டு காவல் நிலையத்தில் பெண் புகார்!