fbpx

மரண பீதியிலும் நெகிழ்ச்சி!… நிலநடுக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்!… வைரலாகும் வீடியோ!

Taiwan: தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, குழந்தைகளை காப்பாற்றி செவிலியர்களின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று அதிகாலையில் 7.5 ரிக்டர் அளவில் தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தில், இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 10 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது செவிலியர்கள் செய்த துணிச்சலான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தநிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் ஓடி வந்து, ஒரு அறையில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் வைத்து பாதுகாப்பு அரணாய் நின்றனர். மருத்துவமனை சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த காணொலி தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Readmore:செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு…! சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…!

Kokila

Next Post

புற்றுநோய் மட்டுமல்ல சிறுநீரக கற்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒரே தீர்வு…! 'அதலைக்காய்' தெரியுமா..?

Fri Apr 5 , 2024
இன்றைய நாவீனக் காலத்தின் ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகளால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ,மாரடைப்பு,புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.’உணவே மருந்து’ என்ற பழமொழிக்கேற்றப்படி, நம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். ‘அதலைக்காய்’ என்பது இயற்கை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில், அது பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.இது எந்த […]

You May Like