திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பகல் நேர பயணத்திற்கான ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் நிறுத்தம் செய்யப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் பயணிக்கும் பகல்நேர ஸ்லீப்பர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மீதான புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இருப்பினும், திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கும் பகல் நேர ரயில்களின் முன்பதிவு நீக்கப்பட்ட பெட்டிகளுக்கு ஸ்லீப்பர் டிக்கெட் வழங்கப்படும்.

கேரளாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை மங்களூர்-சென்னை மெயில், மலபார் மங்களூர்-சென்னை-மங்களூர், திருவனந்தபுரம்-சென்னை, கன்னியாகுமரி-பெங்களூரு உள்ளிட்ட ரெயில்களில் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ரயில் எண்கள்
மங்களூர்- சென்னை எழும்பூர் (16160/16159), திருவனந்தபுரம்- செகந்திராபாத் சபரி (17229), கன்னியாகுமரி- புனே (16382), திருவனந்தபுரம்- சென்னை (12624), கன்னியாகுமரி- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (16525) உள்ளிட்ட ரயில்களும் இந்த பட்டியலில் ஆடலும்.