fbpx

கனமழை எச்சரிக்கை எதிரொலி…! 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்…!

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை கடிதம் எழுதி உள்ளது.

கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

தொண்டர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்!… தெலங்கானா காங்., தலைவர் சர்ச்சை பேச்சு!

Tue Nov 14 , 2023
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சித் தொண்டர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்படும்” என தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும்கட்சியான பி.ஆர்.எஸ்., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் […]

You May Like