fbpx

தூள்…! மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சுழல் நிதி…! மத்திய அரசு தகவல்

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தக முயற்சிகள், தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியை மேம்படுத்தவும் அவர்களுக்கு நாடு முழுவதும் சந்தை மற்றும் வணிக விரிவாக்கத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நாட்டில் 90.87 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில்10.05 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் கிராமிய தொழில்முனைவோர் திட்டம், சுய உதவிக் குழு பெண்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறு தொழில்களை தொடங்க உதவுகிறது. அக்டோபர் 2024 நிலவரப்படி 3.13 லட்சம் கிராமப்புற நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளித்துள்ளது. சுய உதவிக் குழு மகளிர், வங்கித் தொடர்பாளர் சகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். வைப்புத்தொகை, கடன், பணம் அனுப்புதல், ஓய்வூதியம் மற்றும் காப்பீடு உள்ளிட்ட வங்கி சேவைகளை கிராம மக்கள் பெறுவதற்கு இவர்கள் உதவுகின்றனர்.தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆதரவுடன் பணியமர்த்தப்பட்ட வங்கி தொடர்பாளர்களின் எண்ணிக்கை 1,35,127 ஆகும்.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய கல்வி நிறுவனங்களின் நிதி மேலாண்மை திறனை வலுப்படுத்தவும், வங்கியின் முக்கிய நிதியை ஈர்ப்பதற்கான சாதனை வரலாற்றை உருவாக்கவும் நிரந்தரமாக நிதி வழங்குகிறது. இதில் ஒரு சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதி ஆகியவை அடங்கும்.

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மூலதன ஆதரவு (சுழல் நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி) ரூ.48,290 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுய உதவிக் குழுக்கள் நவம்பர் 2024 வரை ரூ.9.71 லட்சம் கோடி வங்கிக் கடன் பெற்றுள்ளன. மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் செலவைக் குறைக்கும் பொருட்டு, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி மானியம் வழங்குகிறது.

கிராமப்புறங்களில் உள்ள சிறிய மற்றும் குறு பெண் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கிராம அளவில் உற்பத்தியாளர் குழுக்கள் (முறைசாரா நிறுவனங்கள்) மற்றும் மாவட்ட / வட்டார அளவில் பெரிய நிறுவனங்கள் (முறையான நிறுவனங்கள்) ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளித்து வசதி செய்கிறது. இதுவரை, தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் சுமார் 15 லட்சம் பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய 1,245 மகளிருக்கான உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை நிறுவ உதவியுள்ளது. மேலும், 32 லட்சம் பெண் உறுப்பினர்களை உள்ளடக்கிய 1.78 லட்சம் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

English Summary

Revolving fund of Rs. 20,000 to Rs. 30,000 for women’s self-help groups

Vignesh

Next Post

தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன்... தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் கிடைக்கும்...! மத்திய அரசு அறிவிப்பு

Sat Dec 21 , 2024
National Consumer Helpline... available in 17 languages ​​including Tamil

You May Like