fbpx

Election 2024 | திமுகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ்.!! கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்.!!

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற போராடி வருகிறது.

இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல கட்சிகள் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா கூட்டணி சார்பாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு கூட திமுக கட்சியினர் காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து திமுகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் முக்கிய அங்கமாக திகழும் திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் அவர் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக போராடி வரும் நிலையில் இது போன்ற கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள் வெற்றியை பாதிக்கும் என கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More: PM MODI | “தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழும் பிரதமர் மோடி”… ஜே.பி நட்டா புகழாரம்.!!

Next Post

IPL 2024: சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! அணியில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்.!!

Sun Apr 7 , 2024
IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் விலகி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி சென்னை அணிகின்ற ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது . 20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாலு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. […]

You May Like