fbpx

RIP..!! நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்..!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத் பாபு. மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

மிகப்பெரும் ஹிட் அடித்த படங்கள் சரத் பாபுவிற்கும் பெரும் புகழை தேடிக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடம், இந்தி, மலையாள படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார். 90 களில் ரஜினிகாந்த் மற்றும் சீரஞ்சீவி உடன் சரத் பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது 71 வயதான நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Chella

Next Post

நாமக்கல் மாவட்ட புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு…..!

Mon May 22 , 2023
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிந்து வந்த ஸ்ரேயா வி.சிங் வேளாண் துறை கூடலூர் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் பணியில் இருந்த உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்து கொண்டிருக்கிறார் இதனை தொடர்ந்து, அவர் இன்று காலை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் உமா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு சுகாதாரத் துறையில் […]

You May Like