fbpx

RIP | ’அஞ்சாதே’ திரைப்பட நடிகர் ஸ்ரீதர் காலமானார்..!! சோகத்தில் திரையுலகம்..!!

அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் என்ற துணை நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார்.

இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாக நடித்திருந்தார். அவரின் அந்த நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இரவு 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

14+1 கொடுக்க முடியாது..!! பாஜகவிடம் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகும் தேமுதிக..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Sat Feb 10 , 2024
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாஜக தரப்பும், அதிமுக தரப்பும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இரண்டு தரப்பிலும் கூட்டணிக்கு அழைப்பதால் தேமுதிக தனது டிமாண்ட்டை அதிகரித்துக் கொண்டே சென்றது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய பிரேமலதா, “தேமுதிகவுக்கு 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் யார் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக […]

You May Like