பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் இந்திய நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் கடந்த 1996இல் பத்மபூஷன் பெற்றார். மேலும், பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பிசி ராய் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் பிரபல கண் மருத்துவமனை மற்றும் முதன்மையான கண் சிகிச்சை சங்கர் நேத்ராலயா நிறுவனர் மருத்துவமனையான டாக்டர் பத்ரிநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.
டாக்டர் பத்ரிநாத் காலமானார் என்ற செய்தியை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ராம சுகந்தன் உறுதிப்படுத்தினார். அவரது மறைவுக்காக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர். டாக்டர் பத்ரிநாத் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978 இல் இந்த அமைப்பை நிறுவினார். இதன்மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.