ஷாருக்கானின் “ஓம் சாந்தி ஓம்” ஹிட் திரைப்படத்தின் வாயிலாக புகழ்பெற்ற நடிகர் நித்தேஷ் பாண்டே (51) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலமானார். சல்மான் கானின் தபாங் 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும், தற்போது ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக செல்லும் அனுபமா உள்ளிட்ட பல தொலைக்காட்சி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். நித்தேஷ் பாண்டே மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நித்தேஷ் பாண்டே சுமார் 25 ஆண்டுகளாக பொழுதுபோக்கு துறையில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். அவர் பெரும்பாலும் தொலைக்காட்சி, நாடகம் மற்றும் சினிமாவில் பணியாற்றினார். அவர் 90-களின் முற்பகுதியில் நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை செய்தார். அவர் தேஜஸ், மன்சிலின் அபானி அபானி, சாயா, அஸ்தித்வா ஏக் பிரேம் கஹானி, ஜஸ்டஜூ மற்றும் துர்கேஷ் நந்தினி போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றினார். அவருக்கு தயாரிப்பு நிறுவனமும் இருந்தது. அவரது மிக முக்கியமான படங்கள் பதாய் தோ, ஓம் சாந்தி ஓம் மற்றும் கோஸ்லா கா கோஸ்லா போன்றவை. அனுபமா மற்றும் பியார் கா தர்த் ஹை மீத்தா மீத்தா ப்யாரா பியாரா ஆகியவை அவரது கடைசி டிவி நிகழ்ச்சிகளாகும்.